Friday, June 23, 2006

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - 02

01 - நூல் மரபு
________________________


முதல் எழுத்துக்கள்


01 . எழுத்து எனப் படுப
அகரம் முதல் னகரம் இறுவாய்
முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபில் மூன்று அலங்கடையே.

---------------

எழுத்து எனப்படுவது அ முதல் ன வரையிலான முப்பது என்பர். சார்பு எழுத்து மூன்று அல்லாத இடத்தில்

அலங்கடை = அல்லாத இடம்

அன்புமணியின் Cologne Online Tamil Lexicon: Search Results

அலங்கடை = in places other than, except in the case of


சார்பு எழுத்துக்கள்

2 - அவைதாம்
குற்று இயல் இகரம், குற்று இயல் உகரம்
ஆய்தம் என்ர
முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன


குறுகிய ஓசையுடைய இகரம், உகரம் மற்றும் மூன்று புள்ளியுடைய ஆய்தம் இவை எழுத்தை ஒத்து அமைவன.

அன்ன - such or similar things, impers. pl. are of th same kind, are similar, impers. pl. of finite appel; an appel. word of comparison

3 - குறில் எழுத்துக்கள்

அவைதாம்
அ இ உ எ ஓ என்னும்
அப்பால் ஐந்தும்
ஓர் அளபு இசைக்கும் குற்று எழுத்து என்ப

அ இ உ எ ஓ என்னும் ஐந்து எழுத்துக்களும், ஓர் அளபில் ( . measurement; 2. lengthening of the sound of a letter ) அதாவது ஒரு மாத்திரையில் ஒலிப்பவைகள் குறில் எழுத்துக்கள் எனப்படும்.


4 - ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும்
அப்பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப



ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் ஏழு எழுத்துக்களும் இரண்டு மாத்திரையில் ஒலிப்பவைகள் நெடில் எழுத்துக்கள் எனப்படும்.

5 - மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே


மூன்று மாத்திரை ஆளவில் எந்த எழுத்தும் ஒலிக்காது


6 - நீட்டம் வேண்டின் அவ் அளபு உடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்


ஒலி அதிகம் தேவைப் பட்டால் அந்த மாத்திரையளவிற்கு தேவையான எழுத்து ஒலிகளை கூட்டி எழுப்புதல் என்று புலவர்கள் கூறுவர்,

.

******


தொடரலாம்

8 comments:

நற்கீரன் said...

தமிழின் மாணவன். ஆர்வத்துடன் தொடர்ந்து படிக்க இருக்கின்றேன்.

இலவசக்கொத்தனார் said...

என் புரிதல் சரியா எனச் சொல்லுங்கள்

1) எழுத்துகள் மொத்தம் 30 (12 உயிர் எழுத்துகள் மற்றும் 18 மெய் எழுத்துகள்) சார்பெழுத்துகளான இகரம் உகரம் மற்றும் ஆய்தம் இக்கணக்கில் இருக்கின்றன. ஆகையால் சார்பெழுத்து மூன்று அல்லாத இடத்தில் என்பது சரியாகப் புரியவில்லை.

2) குறுகிய ஓசையுடைய இகரம் உகரம் மற்றும் ஆய்தம் ஒரே வகையை சார்ந்த எழுத்துகள். இவை குற்றெழுத்துகள் எனப்படும்.

3) ஒரு மாத்திரை அளவில் ஒலிப்பவை குற்றெழுத்துகள். இவை முறையே அ,இ,உ,எ,ஒ.

4) இரண்டு மாத்திரை அளவில் ஒலிப்பவை நெடில்கள். இவை முறையே ஆ,ஈ,ஐ,ஊ,ஏ,ஓ,ஔ.

5) மற்றும் 6) நேரடியான விளக்கங்கள்தான்.

மேலும் ஒரு சந்தேகம். இகரம் மற்றும் உகரம் எப்பொழுது குற்றெழுத்துக்களாகவும் எப்பொழுது குறில் எழுத்துகளாகவும் அறியப்படும்? சற்று விளக்க முடியுமா? மற்றொரு சமயத்தில் இது குறித்துப் பேச இருக்கிறீர்களானால் காத்திருக்கிறேன்.

Unknown said...

நன்றி நற்கீரன் :

உங்களுடன் நானுமே படித்துக் கொண்டிருக்கிறேன். உங்களின் சக மானவன் தான் நானும். :)

Unknown said...

வணக்கம் கொட்த்தனார் :


1) எழுத்துகள் மொத்தம் 30 (12 உயிர் எழுத்துகள் மற்றும் 18 மெய் எழுத்துகள்) சார்பெழுத்துகளான இகரம் உகரம் மற்றும் ஆய்தம் இக்கணக்கில் இருக்கின்றன. ஆகையால் சார்பெழுத்து மூன்று அல்லாத இடத்தில் என்பது சரியாகப் புரியவில்லை.

&&&&&&&&&&&&

முப்பது எழுத்துக்களில் ஆய்த எழுத்தும் " குற்றியல் உகரம் குற்றியல் இகரம் " கணக்கில் இல்லை.

பின் வரவிருக்கும் பல பாடல்களில் இவை விளக்கப் படுகிறது.
***********

இகரம் மற்றும் உகரம் அதாவது "இ" மற்றும் "உ" மற்றும் ஆய்தம் ஒரே வகையைச் சார்ந்தது அல்ல. குற்றியலுகரம் குற்றியலிக்கரம் இவை பின்னர் பாடல்களில் விளக்கப் பட்டிருக்கிறது.
*********

3 & 4 சரியே


***


குற்றியலுகரம் குற்றியலிகரம் பகுதியில் இதைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ளலாம்.

அன்புடன்
ஐயப்பன்

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். தெளிவாத் தானே விளக்கம் சொல்லியிருக்கார்?!

எழுத்துகள் மொத்தம் 30. சரி. அவை உயிர் 12 + மெய் 18. சரி. சார்பெழுத்துகள் இகரம், உகரம், ஆய்தம் அல்ல; குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் - இவை சார்பெழுத்துகள்; இவை இந்த 30 எழுத்துகளில் அடங்கா.

குற்றியலிகரம் வேறு. இகரம் வேறு. அதே போல் தான் குற்றியலுகரமும் உகரமும். இகரமும் உகரமும் உயிரெழுத்துகளில் அடக்கம். குற்றியலிகரமும் குற்றியலுகரமும் இல்லை.

பேச்சிலும் எழுத்திலும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் அவ்வளவாய் வருவதில்லை; அவை பெரும்பாலும் செய்யுளிலேயே பயின்று வருகின்றன. அவை இகரமும் உகரமுமே; ஆனால் குறிலெழுத்துகளுக்குரிய ஒரு மாத்திரை அளவு ஒலிக்காமல் அதனை விடக் குறுகிய காலத்திலேயே ஒலிக்கும்.

குற்றியலுகரத்தையும் குற்றியலிகரத்தையும் தொல்காப்பியர் சார்பெழுத்துகள் என்று தான் சொல்லியிருக்கிறார். அவற்றை குற்றெழுத்துகள் என்று சொல்லவில்லை. மாறாக குறில் என்று நாம் தற்போது சொல்லும் அ, இ, உ, எ, ஒ இவற்றையே குற்று எழுத்து என்கிறார். இவை ஐந்தும் ஒரு மாத்திரை அளவு ஒலிப்பவை. தொல்காப்பியர் குற்றெழுத்து நெட்டெழுத்து என்று சொன்னதை நாம் தற்போது குறில், நெடில் என்கிறோம்.

இப்போது புரிந்ததா? இன்னும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள். இல்லை இனி வரும் பகுதிகளில் தெரிந்து கொள்கிறேன் என்றாலும் சரி.

இலவசக்கொத்தனார் said...

நன்றி ஐய்யப்பன் மற்றும் குமரன். சில கேள்விகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை தகுந்த சமயத்தில் கேட்கிறேன்.

CAPitalZ said...

///5 - மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே///

மூன்று மாத்திரை அளவில் இசைத்தால் அது எழுத்து அல்ல‌

என்று தானே சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்?

Floraipuyal said...

அன்பர் இராமகியின் விளக்கம் (இதுவே சரி என்பது என் புரிதல்):
எழுத்துக்கள் என்று சிறப்பாகச் சொல்லப் படுவன முப்பது (சிறப்பாக எழுத்துக்கள் என்று சொல்கிறாரே தவிர இவை மட்டும் தாம் எழுத்துக்கள் என்று சொல்லவில்லை ). அது தவிர குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்னும் மூன்று பாற் புள்ளிகளும் எழுத்துக்களே ( முன்பு இம்மூன்றிற்கும் எழுத்து வடிவம் இருந்துள்ளன என்பதும் குற்றிலிகர உகரங்களைத் தொலைத்து விட்டோம் என்பதும் இவர் கருத்து. )

மூன்றளபு ஒலிக்கக் கூடிய எழுத்தென்று ஒன்றில்லை. எனவே நீட்டம் வேண்டின் நெடிலையும் குறிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பது பொருள்.

http://valavu.blogspot.com/2006/10/1.html