Monday, July 07, 2008

தொல்காப்பியம் : எழுத்ததிகாரம் : 2 : மொழி மரபு : 3 : எழுத்துகள் மொழியாதல்

10 : நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி

உயிர் நெடில் ஏழும் ஓரெழுத்து ஒருமொழியாய் வரும்.
(எ.கா)
ஆ : பசு
ஈ : கொடு
ஊ : உணவு
ஏ : கூர்மை
ஐ : தலைவன்
ஓ : ஓசை
கௌ : கவ்வுதல்

11 : குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே

உயிர்க்குறில் ஐந்தும் ஒரு மொழியாகும் இயல்புடையன அல்ல

12 : ஓரெழுத்து ஒருமொழி ஈரெழுத்து ஒருமொழி
இரண்டிறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே

மொழி மூவகைப்படும். ஓரெழுத்து ஒருமொழி (ஆ), ஈரெழுத்து ஒருமொழி ( மணி), இரண்டிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வரும் மொழி (ஆண்டு, ஆடவர் )

செல்வி ஷங்கர் 07072008

5 comments:

said...

வருகைப்பதிவேட்டில் என்பெயரையும் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். வாழ்க உம் தமிழ்ப்பணி!

said...

அருமையான முயற்சி. தொடர்ந்து பதியவும்.

said...

//உயிர் நெடில் ஏழும் ஓரெழுத்து ஒருமொழியாய் வரும்.

ஊ : உணவு
ஏ : கூர்மை
ஐ : தலைவன்
ஓ : ஓசை//

தகவலுக்கு நன்றி.
ஆனால் இவைகளை நான் இதற்கு முன் எங்கும் படித்ததில்லை.
இலக்கியத்தில் இவைகள் கையாளப்பட்ட இடங்களின் எடுத்துக் காட்டையும் தர முடியுமா.

said...

தோழர்களுக்கு வணக்கம்,
நான் இப்பொழுது தொல்காப்பியம் படித்துக்கொண்டிருக்கிறேன்.(எழுத்து, சொல்லும் முடிந்தன) சில விளக்கங்களுக்காக இணையத்தில் தேடியபோது உங்களின் இந்த வலைப்பூவை பார்த்தேன், மிக்க மகிழ்சி, எனக்குள்ள ஐயங்களை இங்கு கேட்கலாமா, அல்லது தங்களின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா? (நான் ஏற்கனவே அகரம் அமுதாவிடம் வெண்பா குறித்து உரயாடி இருக்கிறேன்)