Thursday, July 20, 2006

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - 4

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - 4

மகரக் குறுக்கம் :

13 :

அரையளவு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகும் தெரியுங் காலை

வேறோர் எழுத்தினது ஓசையினால் மகர ஒற்று தன் அரைமாத்திரையில் இருந்து குறைந்து கால்மாத்திரையாக மாறிவிடும்.
உதாரணத்துக்கு "போன்ம், வரும் வண்ணக்கண்" இது பெரும்பன்மையான வழக்கிலில்லை..

எழுத்துகளின் வரிவடிவம்:

14 :
உட்பெறு புள்ளி உருவா கும்மே

"ம"கரம் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றியது.

அதாவது ப என்ற எழுத்தின் உள் புள்ளி வைத்தால் அது " ம " என்ற எழுத்தாக பழங்காலத்தில் கருதப்பட்டு வந்தது. தற்போதைய வழக்கில் இல்லை.


15 :
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலைய

மெய் எழுத்துகள் புள்ளியோடு இருக்கும்.

16 :
எகர ஒகரத்து இயற்கையும் அன்றே.


எ மற்றும் ஓ மெய்போலவே புள்ளி பெற்று வரும் என்பதாம். இப்போது வழக்கில் இல்லை.

17:
புள்ளியில்லா எல்லா மெய்யும்
உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும்
ஏனையு உயிரோடு உருவுதிருன் துயிர்த்தலும்
ஆயீ ரியல உயிர்த்தவாரே


மெய்யெழுத்துகள் "அ" வுடன் சேர்ந்தபோது புள்ளி நீங்கி அகரத்தோடு சேர்ந்து
ஒலிக்கும். மற்ற உயிரெழுத்துடன் சேரும் போது அதன் வடிவம் மாறி அந்த
உயிரெழுத்துடன் சேர்ந்து ஒலித்தலும் என இருவகையில் வரும்.

எ.கா :
க ங கா கீ கூ

18 :
மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே

உயிர் மெய் எழுத்துகளில் ஓசை / ஒலியானது மெய்யெழுத்தின் ஓசை / ஒலி
முதலில் தோன்றி அதற்கு பிறகு

வல்லினம் / மெல்லினம் / இடையினம்

19 :
வல்லெழுத் தென்ப கசட தபற

20 :
மெல்லெழுத் தென்ப ஙஞணநமன

21 :
இடையெழுத் தென்ப யரல வழள

பழைய பாடம் தான் :)

கசடதபற வல்லினம்
ஙஞணநமன மெல்லினம்
யரலவழள இடையினம்
"யாருமிங்கே ஓரினம்"

அன்புடன்
ஐயப்பன்

19 comments:

said...

//"யாருமிங்கே ஓரினம்"//

மெசேஜு! போட்டுத் தாக்கும்வோய்!
:-D

said...

**********
//"யாருமிங்கே ஓரினம்"//

மெசேஜு! போட்டுத் தாக்கும்வோய்!
:-D

**********

அட ராமச்சந்திரா....
வம்புல மாட்டி விட்டுடாதீரும் வோய்..

அதெல்லாம் இல்லைங்கானும்ம் எங்களுக்கு சின்னவயசுல சொன்ன பாடமையா அது.. கசடதபற ன்னு ஆரம்பிச்சா அதுல தான் முடிக்கனும்..

மெசேஜு சொல்ல தான் பெரியவங்க பல பேர் இருக்காங்களே நாம எதுக்கு .. நாமுண்டு நம் வேலையுண்டு அப்புட்டு தேன்

அன்புடன்
ஐயப்பன்

said...

கோலங்கள் சீரியலில் எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் தொல்காப்பியந்தான்!

தங்களுக்கு?

said...

கோலங்கள் சீரியலில் எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் தொல்காப்பியந்தான்!

தங்களுக்கு?
&&&&&
சீரியல் எல்லாம் பாப்பீரோ... நல்ல பழக்கமையா தொடர்ந்து பாரும் ...

said...

கிருட்டினன்,
மிகவும் நல்ல பயனுள்ள பதிவு.
மிக்க நன்றி.

said...

நன்கு விளக்கமாய் எழுதுகிறீர்கள் ஐயப்பன். மிக்க நன்றி.

ஒரு கேள்வி: தொல்காப்பியத்தில் இல்லை. உங்கள் பதிவில் இருக்கும் ஒரு சொல்லைப் பற்றியது. பெரும்பான்மை சரியா? பெரும்பாண்மை சரியா?

said...

நன்றி குமரன்

//
ஒரு கேள்வி: தொல்காப்பியத்தில் இல்லை. உங்கள் பதிவில் இருக்கும் ஒரு சொல்லைப் பற்றியது. பெரும்பான்மை சரியா? பெரும்பாண்மை சரியா? //

அது எழுத்து பிழை. சுட்டிக் காட்டியதற்கு நன்றி சரி செய்துவிட்டேன்


அன்புடன்
ஐயப்பன்

said...

எழுத்துக்கள் பற்றிய பகுதி நிறைவுக்கு வந்த பின் அது வரை நடந்த பாடங்களைத் கொஞ்சம் ஜனரஞ்சகமான நடையில் தொகுத்து தர வேண்டும். ப்ளீஸ்.

said...

அது எழுத்துப்பிழை தானா என்று சரியாகத் தெரியவில்லை எனக்கு. பெரும்பான்மை என்று எழுதிப் படித்திருக்கிறேன். அதனால் உங்கள் பதிவில் பெரும்பாண்மை என்று இருப்பதைப் பார்த்ததும் எழுத்துப்பிழை என்று தான் எண்ணினேன். ஆனால் கூகிளாண்டவரைக் கேட்டால் அவர் நிறைய எடுத்துக்காட்டுகள் கொடுத்தார். அதனால் இப்போது எது சரி என்று தெரியவில்லை. :-(

said...

வெற்றி said...

கிருட்டினன்,
மிகவும் நல்ல பயனுள்ள பதிவு.
மிக்க நன்றி.
////

வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி வெற்றி அவர்களே.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

அன்புடன்

ஐயப்பன்

said...

இலவசக்கொத்தனார் said...

எழுத்துக்கள் பற்றிய பகுதி நிறைவுக்கு வந்த பின் அது வரை நடந்த பாடங்களைத் கொஞ்சம் ஜனரஞ்சகமான நடையில் தொகுத்து தர வேண்டும். ப்ளீஸ்.

//////


நம்ம சரளாக்காவையும் கமலாக்காவையும் குட்டியார சொல்றீங்க... செய்யலாமே அடுத்த பதிவில இருன்து

அன்புடன்
ஐயப்பன்

said...

குமரன் (Kumaran) said...

அது எழுத்துப்பிழை தானா என்று சரியாகத் தெரியவில்லை எனக்கு. பெரும்பான்மை என்று எழுதிப் படித்திருக்கிறேன். அதனால் உங்கள் பதிவில் பெரும்பாண்மை என்று இருப்பதைப் பார்த்ததும் எழுத்துப்பிழை என்று தான் எண்ணினேன். ஆனால் கூகிளாண்டவரைக் கேட்டால் அவர் நிறைய எடுத்துக்காட்டுகள் கொடுத்தார். அதனால் இப்போது எது சரி என்று தெரியவில்லை. :-(
/////////////////குமரன் :

பெரும்பான்மை தான் சரி. பெரும்பாண்மை தவறு. கழக தமிழகராதியிலும் சரி பார்த்துவிட்டேன்.

அன்புடன்

ஐயப்பன்

said...

அட வெண்பா வித்தகர் இப்போ தொல்காப்பியத்துக்கும் உரை எழுத ஆரமிச்சாச்சா...

முதல்லேர்ந்து மெதுவா வரேன். எப்போன்னு மட்டும் கேட்கப்படாது..

அப்படியே, தமிழன்பர்களே..
நல்ல தமிழ் டிவியில் வருவதேயில்லேன்னு அலுத்துக்கறீங்களா? கவலை விடுங்க.

GrandMaster - விஜய் டிவில பாருங்க. காயத்ரி ஜெயராம் னு அறியப்பட்ட தமிழ்நாட்டு நடிகை பேசுறாங்க பாருங்க தமிழ். அடாடா.. தேவாம்ருதம். கேட்டு அனைத்து நலனும் பெறுக.

said...

தொல்காப்பிய விளக்கம். நல்ல அறிமுகம்.

ஒரு சிறிய கருத்து....எல்லா விளக்கங்களுக்கும் எடுத்துக்காட்டு தந்தால் நன்றாக இருக்கும். பழஞ் செய்யுளானாலும் கொடுங்கள்.

பெரும்பான்மை என்பதே முறை. பெரும்பாண்மை என்பது பிழை. இதிலென்ன ஐயம்?

said...

//அட வெண்பா வித்தகர் இப்போ தொல்காப்பியத்துக்கும் உரை எழுத ஆரமிச்சாச்சா...
//


வாங்க இராமநாதன் :

வெண்பாவிற்கு உரை என்பதை விட.. நான் அறிந்ததை பதித்து வைக்கிறேன். பல ஜாம்பவான்கள் இதற்கு ஏற்கனவே உரை எழுதி இருக்கிறார்கள். நான் எழுதுவது அவற்றிற்கு உறை போட கூட காணாது :)

//
முதல்லேர்ந்து மெதுவா வரேன். எப்போன்னு மட்டும் கேட்கப்படாது..
//

:)

//
அப்படியே, தமிழன்பர்களே..
நல்ல தமிழ் டிவியில் வருவதேயில்லேன்னு அலுத்துக்கறீங்களா? கவலை விடுங்க.

GrandMaster - விஜய் டிவில பாருங்க. காயத்ரி ஜெயராம் னு அறியப்பட்ட தமிழ்நாட்டு நடிகை பேசுறாங்க பாருங்க தமிழ். அடாடா.. தேவாம்ருதம். கேட்டு அனைத்து நலனும் பெறுக.
///

இன்றைய சின்னத்திரை பெரும்பாலும் சினிமா மற்றும் அழுகைத்தொடர்களில் சிக்கிக் கொண்டிருக்கும்போது விஜய் தொலைக்காட்சி நல்ல மாற்றம் தருகிறது. அப்படியே வெள்ளிக் கிழமை இரவில் கலக்கப் ப்ோவது யாரு வும் பாருங்கள்..


அன்புடன்
ஐயப்பன்

said...

//தொல்காப்பிய விளக்கம். நல்ல அறிமுகம்.//

நன்றி இராகவன்

//
ஒரு சிறிய கருத்து....எல்லா விளக்கங்களுக்கும் எடுத்துக்காட்டு தந்தால் நன்றாக இருக்கும். பழஞ் செய்யுளானாலும் கொடுங்கள்.
//

கண்டிப்பாக அடுத்து வரும் பதிவுகளில் இதை மனதில் கொண்டு எழுதுவேன்

//
பெரும்பான்மை என்பதே முறை. பெரும்பாண்மை என்பது பிழை. இதிலென்ன ஐயம்?
//

கூகுளில் தேடியதால் வந்த குழப்பம் அவ்வளவு தான். :)

வருகைக்கு நன்றி


அன்புடன்

ஐயப்பன்

said...

நன்றி ஐயா மிக்க நன்றி.

இப்படி ஒன்றைத் தான் நான் தேடிக்கொண்டு இருந்தேன். கட்டாயமாக முழுவதும் படிப்பேன். தொடருங்கள் உங்கள் பணியை.

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/

said...

///புள்ளியில்லா எல்லா மெய்யும்
உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும்///

புள்ளி இல்லாத எல்லா மெய் எழுத்துக்களும் அகரத்தோடு சேர்ந்து ஒலிக்கும்.

ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், "புள்ளீ நீங்கி" என்று சொல்லுதல் ஒரு இலக்கண முறையைக் குறிப்பிடுவது போல் இருக்கிறதல்லவா. மற்றய‌ இந்திய மொழிகள் இப்படி தான் புள்ளி நீங்கி என்று deletion முறையைக் கையாண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழில் அப்படி இல்லை. இது என் தனிப்பட்ட‌ கருத்து.

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/

said...

பேச்சு வளக்கில் தொல்காப்பியத்தைப் பற்றி வாசிக்க இங்கே சென்று பார்க்கவும். எனக்கு இது விளங்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/35685


அவர் 4ம் பாகம் மட்டும் போய் விட்டார்.


______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/