Sunday, June 29, 2008

தொல்காப்பியம் : எழுத்ததிகாரம் : 2 : மொழி மரபு : 1 : சார்பெழுத்துகள் தொடர்ச்சி

04 : இடைப்படில் குறுகும் இடனுமார் உண்டே
கடப்பாடு அறிந்த புணரியல் ஆன

குற்றியலுகரம் தனி மொழியில் மட்டுமின்றி புணர் மொழியின் இடையே தோன்றினாலும் தன் அரை மாத்திரையிலிருந்து குறுகி ஒலிக்கும்.
எ.கா : ஆடு, பாடு, ஆடுகளம், பாடுபொருள்

05 : குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே

ஆய்த எழுத்து உயிர்க்குறில் முன்னும் வல்லின உயிர்மெய்க் குறில் பின்னும் வர இடையே பயின்று வரும்.
எ; கா : எஃகு, கஃசு, அஃது, இஃது

06 : ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும்

நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும் போதும் அரை மாத்திரையே ஒலிக்கும்.
எ, கா : அஃறிணை, முஃடீது ( அல் + திணை, முள் + தீது)

07 : உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலை யான

உருவின் கண்ணும் ஒலியின் கண்ணும் சிறுபான்மை ஆய்தம் தோன்றும். பொருளுடைய சொல்லும் அவை அல்லாத மொழிகளும் மெய்யெழுத்துகள் போல் அரை மாத்திரையும், சிறுபான்மை மிகுந்தும் ஒலிக்கும். இவை ஆய்தம் சுருங்கா எழுத்துச் சொற்களாகும்.
எ. கா : கஃறு, சுஃறு ( உரு, ஒலி )

இவை போன்ற சொற்கள் நடைமுறையில் பயன் படுத்துவது இல்லை. ஆகையினால் இவை புதுமையாக இருக்கும். இயன்ற வரை நடைமுறைச் சொற்கள் எடுத்துக்காட்டாகத் தர முயல்கிறேன்.

தொடரும் ...... செல்வி ஷங்கர் 29062008








12 comments:

said...

தொல்காப்பியம் பயிலுங்களேன்

Anonymous said...

விளக்கங்கள் சுத்தமா புரியல :( பயில ஆசையா இருக்கு. இப்படி விளங்காம படிச்சா தப்பாகிடுமோன்னு விட்டுடறேன்

said...

எப்போதோ பள்ளி, கல்லூரி நாட்களில்
படித்த ஞாபகம் வருதே!!!
பள்ளியில் கற்றதை விட கல்லூரியில் கொஞ்சம் அதிகமாகவே புரிந்தது.
அதை ஏதோ பெரிய பேராசிரியர் மாதிரி ஒன்பதாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த என் பெரியண்ணன் பையனுக்கு வகுப்பெடுக்க,
அவனளவில் சின்னச்சின்ன வெண்பாக்கள்
எழுதிக் காண்பித்ததும் ஞாபகம் வருதே!!ரொம்ப நாட்கள் அந்த நோட்டையெல்லாம் வைத்திருந்தேன்!ஹும்....!

said...

நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

புத்தகத்தில் உள்ளதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள். இதை எளிமை படுத்தி எழுதினால் எல்லாரும் ஈசியாக புரியும்.

அந்த காலத்திலிருந்து இப்போது ரை ஒரே உதாராணம். இப்போதைய நடைமுறைக்கு யோசியுங்களேன்.

said...

ராமன்,

தமிழ் இலக்கணத்திலேயே குற்றியலுகரமும் குற்றியலிகரமும் ஒலித்துப் பார்க்கும் போது தான் வேறுபாடு புரியும். குமுதம் என்றால் அந்த முதல் "கு" வை அழுத்தமாக உச்சரிக்கிறோம். கொக்கு என்றால் அந்த இறுதி "கு" வை மேலோட்டமாகவே தான் ஒலிக்கின்றோம். முதல் "கு" விற்கு ஒரு மாத்திரை. இறுதி "கு" - அரை மாத்திரை. இதற்கு உரிய இடங்கள் இலக்கணத்தில் விதிக்கப்பட்டிருக்கின்றன. நமக்குத் தெரிந்தாலும் தெரியா விட்டாலும் இது வரை இலக்கணம் பிறழ்ந்ததே இல்லை.

said...

அன்பின் தோழி நானானி,

இலக்கணம் ஈடுபாடு இருந்தால் சுவையானது. சிறு வகுப்பில் படித்தது நம் சிந்தனையில் நிற்பதும் உண்டு. மலரும் நினைவுகளைத் தூண்டி விட்டேனா ?

said...

ஆடுமாடு,

மாறாத பகுதியென நான் இருந்தேன்
மாற்றுகின்ற விகுதியென அவள் வந்தாள் - என்று ஒரு கவிஞன் இலக்கணத்தில் இவ்வளவு ஈடுபாடு கொண்டிருப்பதை படிக்கும் போதெல்லாம் நினைத்து மகிழ்வேன். இல்க்கணம் எக்காலத்தும் மாறாதது. நடைமுறைச் சான்றுகள் என்பது நாம் புரிந்து கொள்வதில் தான் இருக்கிறது.
இருப்பினும் இன்னும் எளிமைப்படுத்த முயல்கிறேன்.

said...

ஆமாம்! செல்வி!
சம்பவங்கள் ஞாபகம் வருது - ஆனால்
சரக்குகள் ஞாபகம் வரவில்லையே!!
என்ன செய்வேன்?

said...

நானானி

படிக்கப் படிக்க அனைத்துமே நினைவில் வருமே !

said...

முயற்சிப்பேன்!

said...

கொஞ்சம் கொஞ்சமா படிச்சிகிட்டு வரேன்!

ரொம்ப பயனுள்ளதா இருக்கு!

இலக்கணம் பள்ளிக்கூடத்துல படிக்கும்போது இல்லாத ஆர்வம் இப்போ வருது!

said...

நாமக்கல் சிபியாரே !!

பல தடவை படிக்கும் போது ஆர்வம் தானாக வருவது இயல்பு தானே !

பள்ளியில் படித்தபோது இலக்கு வேறு - அறிவு பெறுவதை விட தேர்வில் வெற்றி பெறுவது நோக்கமாக இருந்தது.

வருகைக்கு நன்றி