Monday, June 23, 2008

தொல்காப்பியம் 06 -- எழுத்ததிகாரம் - பிற மரபுகள்


31 அ இ உ அம் மூன்றும் சுட்டு.


அ இ உ -என்ற இம்மூன்றும் பெயரைச் சார்ந்து வரும் சுட்டெழுத்துகளாகும். .
உ என்பது தற்போது வழக்கிலில்லை.

எ.கா : அது இது உது

அச்சிறுவன், இப்பெண், அவ்விடம், இவ்விடம், அப்பொருள், இப்பொருள்,
அக்காலம், இக்காலம், அவ்விலை, இவ்விதழ், அச்சிறப்பு, இப்புகழ்


32 ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா.
ஆ, ஏ, ஓ என்ற மூன்றெழுத்துகளும் வினா எழுத்துகளாக வரும்.

எ.கா : அவனா?, ஏன்?, ஏது?,அவளோ ?

ஆ ஏ ஓ என்று வினவுப் பொருளில் பயன்படும் என்றால், அவை சொற்களின் இறுதி ஒலியாக ஒலிக்கும் என்பது சூத்திரத்தால் சுட்டப்படும் விதி.
அவனா, அவனோ என்பன போலவே,
அப்படியும் ஆனதே?
போனதும் உண்டே?
என்றெல்லாமும் வினா வகைகள் வழக்கில் இருந்தன. அப்படி வினா எழுப்பும் வழக்கம் இப்போது அருகிவிட்டது என்றாலும்,
'ஏண்டா இப்படி மொறைக்கற? இப்ப என்ன சொல்லிட்டேன்? எதுக்கு இவ்ளோ கோவம்?'
'பின்னே? நான் இவ்ள நேரம் இங்க காத்திட்டிருக்கேன்... என்னப் பாக்கவே பாக்காம பராக்குப் பாத்துட்டிருந்தா?'
இந்த உரையாடலில், 'பின்னே?' என்ற இடத்தில் ஏகாரம் வினாவாக எழுகிறது அல்லவா, அதுபோன்ற இடங்களில் சிலசமயங்களில் தற்போதும் ஏகாரம் வினாவாகப் பயன்படுவது உண்டு.
ஏன் ஏது என்ற எடுத்துக்காட்டுகள் இங்கே பொருந்தா. மொழியீற்று ஒலிகள் அவை. (அதாவது ஒரு வார்த்தைக்குக் கடைசியில் ஒலிக்கும் ஒலி.) ஏன், ஏது என்பன வார்த்தையின் தொடக்கத்தில் ஒலிக்கும் ஒலிகள்.
33 அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்.


எழுத்துகள் தமக்கு விதிக்கப்பட்ட மாத்திரை அளவு கடந்து
ஒலித்தலும்,ஒற்றெழுத்துகள் தம் மாத்திரையிலிருந்து நீண்டொலித்தலும்
உண்டு.

விளித்தல் பொருளிலும் இசைப்பாடலிலும் இவ்வாறு ஒலிக்கும் என்று புலவர்
கூறுவர்.

எ.கா :கெடுப்பதூஉம், எடுப்பதூஉம், கலங்ங்கு, இலங்ங்கு, உழாஅர்.

பாடல்களில் எழுத்துகள் நீண்டு ஒலிப்பதுமுண்டு.

இத்துடன் எழுத்ததிகாரம் - நூன்மரபு முற்றுப் பெறுகிறது.

அடுத்து - மொழி மரபு.


பி.கு : விளக்கத்துடன் உதாரணமும் தந்து உதவும் ஹரியண்ணா மற்றும் செல்வி ஷங்கர் இருவருக்கும் நன்றிகள் பல :

12 comments:

said...

உ என்பது தற்போது வழக்கிலில்லை.

எ.கா : அது இது உது

உன்னுது
கூட சில இடங்களில் பயன்படுத்தபடுகிறது!

said...

வணக்கம்.தொல்காப்பியத்தை அறிமுகம் செய்கின்றமைக்கு முதற்கண் பாராட்டு.சுட்டெழுத்துகளில்
உ வழக்கில் இல்லை எனினும் ஈழத்தில் 'உதோ' என வழக்கில் உள்ளது.

நூற்பாவில் இசையொடு என வரவேண்டும்.

நெட்டெழுத்து இரு மாத்திரை பெறும் எனினும் பாடல்களில்,விளிகளில் மாத்திரை அளவு அதிகமாகும். "கீ"தனி நெடிலாக இருக்கும்பொழுது இரு மாத்திரை.அதுவே "கீதம் சங்கீதம்"எனத்
திரைப்படப்பாடல்களில் பல மாத்திரை நீண்டு ஒலிப்பதைப்பாடல் கேட்டு உணர்க.

ச,ரி,க,ம,ப,த,நி,ச என்பதை இசைவாணர்கள் நீட்டி முழக்கி ஆலாபனை செய்வதையும் நினைவிற்கொள்க.

said...

ம் .. உள்ளேன் ஐயா...:)

said...

தமிழ் தமிழ் என்று சும்மா பேசிவிட்டு போகாமல் உங்களால் ஆன சிறு முயற்சி மிகவும் நன்று. படித்துவிட்டு கருத்து சொல்வதைவிட படித்ததை நான்கு பேர் அறியச் செய்வதே சாலச்சிறந்தது என நினைக்கிறேன். மென்மேலும் தொடர்ந்து உற்சாகமாக செயல்பட வாழ்த்துக்கள்.

said...

// ஆயில்யன் said...

உ என்பது தற்போது வழக்கிலில்லை.

எ.கா : அது இது உது

உன்னுது
கூட சில இடங்களில் பயன்படுத்தபடுகிறது!//

உண்மை - சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

said...

//முனைவர் மு.இளங்கோவன் said...

வணக்கம்.தொல்காப்பியத்தை அறிமுகம் செய்கின்றமைக்கு முதற்கண் பாராட்டு.சுட்டெழுத்துகளில்
உ வழக்கில் இல்லை எனினும் ஈழத்தில் 'உதோ' என வழக்கில் உள்ளது.

நூற்பாவில் இசையொடு என வரவேண்டும்.

நெட்டெழுத்து இரு மாத்திரை பெறும் எனினும் பாடல்களில்,விளிகளில் மாத்திரை அளவு அதிகமாகும். "கீ"தனி நெடிலாக இருக்கும்பொழுது இரு மாத்திரை.அதுவே "கீதம் சங்கீதம்"எனத்
திரைப்படப்பாடல்களில் பல மாத்திரை நீண்டு ஒலிப்பதைப்பாடல் கேட்டு உணர்க.

ச,ரி,க,ம,ப,த,நி,ச என்பதை இசைவாணர்கள் நீட்டி முழக்கி ஆலாபனை செய்வதையும் நினைவிற்கொள்க.//


இதுவே மறுபடி அளபு என்ற பெயரில் வரும் அல்லவா? இல்லை எனில் அளபெடுத்தலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ?

said...

இசைப்பாடல்களில் ஒரு மாத்திரை அளவுகொண்ட குறிலைக்கூட ஆயிரம் மாத்திரையளவிற்கு நீட்டலாம். அது பாடுபவர் இசையமைப்பவரின் திறமையைப் பொருத்தது. அதையேன் நாம் பார்த்துக்கொண்டு? பொதுவாகக் கவிதைகளில் நீள்வதையும் குறுகுவதையும் காட்டுகளுடன் விவரித்தால் போதாதா? தொடர்ந்து பண்ணுங்கள் ஆயில்யன் நானும் அடிக்கடி வந்து கலந்துகொள்கிறேன். நன்றி.

said...

இசைப்பாடல்களில் ஒரு மாத்திரை அளவுகொண்ட குறிலைக்கூட ஆயிரம் மாத்திரையளவிற்கு நீட்டலாம். அது பாடுபவர் இசையமைப்பவரின் திறமையைப் பொருத்தது. அதையேன் நாம் பார்த்துக்கொண்டு? பொதுவாகக் கவிதைகளில் நீள்வதையும் குறுகுவதையும் காட்டுகளுடன் விவரித்தால் போதாதா? தொடர்ந்து பண்ணுங்கள் ஆயில்யன் நானும் அடிக்கடி வந்து கலந்துகொள்கிறேன். நன்றி.

said...

கயல்விழி முத்துலெட்சுமி said...

ம் .. உள்ளேன் ஐயா...:)//

:)

// நிஜமா நல்லவன் said...

தமிழ் தமிழ் என்று சும்மா பேசிவிட்டு போகாமல் உங்களால் ஆன சிறு முயற்சி மிகவும் நன்று. படித்துவிட்டு கருத்து சொல்வதைவிட படித்ததை நான்கு பேர் அறியச் செய்வதே சாலச்சிறந்தது என நினைக்கிறேன். மென்மேலும் தொடர்ந்து உற்சாகமாக செயல்பட வாழ்த்துக்கள்.//

நன்றி

said...

//அகரம்.அமுதா said...

இசைப்பாடல்களில் ஒரு மாத்திரை அளவுகொண்ட குறிலைக்கூட ஆயிரம் மாத்திரையளவிற்கு நீட்டலாம். அது பாடுபவர் இசையமைப்பவரின் திறமையைப் பொருத்தது. அதையேன் நாம் பார்த்துக்கொண்டு? பொதுவாகக் கவிதைகளில் நீள்வதையும் குறுகுவதையும் காட்டுகளுடன் விவரித்தால் போதாதா? தொடர்ந்து பண்ணுங்கள் ஆயில்யன் நானும் அடிக்கடி வந்து கலந்துகொள்கிறேன். நன்றி.//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமுதா

said...

:))

said...

உள்ளேன் ஐயா!